×

பட்டாபிராமில் கட்டி முடித்து 9 ஆண்டாகியும் பூட்டி கிடக்கும் சமுதாய கூடம்: பொதுமக்கள் கடும் அவதி

ஆவடி:    ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம், 36வது வார்டில் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் சுப நிகழ்ச்சிகளை தனியார் மண்டபத்தில் நடத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் பல ஆயிரம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.      எனவே கடந்த 2009ம் ஆண்டு அப்பகுதி மக்கள் சுபநிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்திட சமுதாய கூடம் கட்டி தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி 2010ம் ஆண்டு பட்டாபிராம், மாடர்ன் சிட்டி பகுதியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.  இந்த சமுதாயக்கூடத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த கூடத்தை திறந்தும், மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் மூடியே வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பட்டாபிராம், மாடர்ன் சிட்டியில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சமுதாயக்கூடம் 9 ஆண்டுகளுக்கு மேலாக மூடியே கிடக்கிறது. இதனால், கட்டிடம் பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. மேலும், கட்டிடத்தின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த கூடம் மூடிய கிடப்பதால், பொதுமக்கள்  பிறந்தநாள், காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண நிச்சயதார்த்தம், திருமணம் வளைகாப்பு உள்ளிட்ட  சுபநிகழ்ச்சி நடத்த முடியவில்லை.     இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை ஆவடி நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே இனியாவது ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு மூடி கிடக்கும் சமுதாய கூடத்தை சீரமைத்து சுப நிகழ்ச்சி நடத்திட மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : public ,community hall , Awadhi Corporation, Pattabram
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...