×

ஏ டிவிஷன் ஹாக்கி அரையிறுதியில் எஸ்பிஐ, ஆர்பிஐ

சென்னை: சென்னையில் நடைபெறும் ஏ டிவிஷன் ஹாக்கிப் போட்டியில் எஸ்பிஐ, ஆர்பிஐ வங்கிகள் அரையிறுதிக்கு முன்னேறின. எழும்பூர் ஹாக்கி அரங்கில் முதலில் நேற்று நடந்த முதல் காலிறுதிப் போட்டியில் பாரத ஸ்டேட் வங்கி(எஸ்டிஐ)-யுனிவர்சல் ஹாக்கி கிளப் அணிகள் மோதின. அதில் இரண்டு அணிகளும் தலா 2 கோல் அடிக்க ஆட்டம் டிராவில் முடிந்தது. பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் எஸ்பிஐ அணி 2-1 என்ற கோல் கணக்கில்  யுனிவர்சல் ஹாக்கி கிளப்பை  அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக எஸ்பிஐ அணியின் செட்ரிக் டி க்ரூஸ் 2 கோல்களும், யுனிவர்சல் அணியின்  கணேஷ், சாந்தகுமார் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற 2வது காலிறுதிப் போட்டியில் இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ)- மெட்ராஸ் நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. அந்த போட்டியிலும் 2 அணிகளும் 4  கோல் அடிக்க ஆட்டம் டிராவில் முடிந்து. பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஆர்பிஐ 3-2 கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. முன்னதாக ஆர்பிஐ அணியின் சவுந்தர் 3,  ராஜா ஒரு கோலும், மெட்ராஸ் நேஷனல் அணியின் கெய்த் பெர்லி 2 கோலும்,  சார்லஸ் லாசரோ, சிவசூர்யா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.


Tags : SBI ,RBI ,semifinals , A Division Hockey Semifinals, SBI, RBI
× RELATED உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில்...