×

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோம்: கேப்டன் சரத் கமல்

சென்னை: ‘ஒலிம்பிக்  போட்டியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் கட்டாயம் பதக்கம் வெல்வோம்’ என்று இந்திய அணியின் கேப்டன் சரத்கமல் தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்யோவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிநடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்கும்  நாடுகள் தகுதிச்சுற்று போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படும். டேபிள் டென்னிஸ் போட்டிக்கான அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்று போட்டி ஜன.22 முதல் 26ம் தேதி வரை  போர்ச்சுகல் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் பங்கேற்க உள்ள 5பேர் கொண்ட இந்திய அணிக்கான பயிற்சி முகாம் சென்னையில் டிச.20ம் தேதி தொடங்கியது. இம்மாதம் 30ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த முகாமை 8 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவரும், முன்னாள் வீரருமான கமலேஷ் மேத்தா நேற்று பார்வையிட்டார். அப்போது வீரர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டனும், 9 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றவருமான சரத் கமல், ‘முதற் கட்ட பயிற்சி சென்னையில் நடக்கிறது. அடுத்து 2வது கட்ட பயிற்சி ஜன.13 முதல் 20ம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெறும். இந்திய அணியில் உள்ள 5 வீரர்களில் நான், சத்யன் ஞானசேகரன், அந்தோனி அமல்ராஜ் ஆகிய 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சத்யன் இப்போது தென்கொரியா பயிற்சி முகாமில் உள்ளார்.  தகுதிச்சுற்றுப்போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவோம்.  ஒலிம்பிக் போட்டியில் கட்டாயம் பதக்கம் வெல்வோம்’ என்றார்.

Tags : Sarath Kamal ,Olympic ,Olympics , Olympic medalist, Captain Sarath Kamal
× RELATED ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள...