×

பாக்சிங் டே டெஸ்ட் நியூசிலாந்து தொடக்கமே தடுமாற்றம்

மெல்பர்ன்: பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வலுவான எண்ணிக்கையை எட்டியுள்ள நிலையில் நியூசிலாந்து தடுமாற்றத்துடன் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையிலான ஐசிசி உலக கோப்பை தொடரின் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடக்கிறது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன் எடுத்திருந்தது.  தொடர்ந்து 2வது நாளான நேற்று களத்தில் 77 ரன்னுடன் களத்தில் இருந்த ஸ்டீவன் ஸ்மித் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 85ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 284ரன்.  அதனையடுத்து ஜோடி சேர்ந்த  டிராவிஸ் ஹெட், கேப்டன் டிம் பெயின் இருவரும் பொறுப்பாக விளையாடினர். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 150 ரன் சேர்த்தனர். டிம் பெயின்  79 ரன் எடுத்திருந்த போது, அவரை  வாக்னர் எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினர்.  அதன் பிறகு வந்தவர்கள்  சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். சதமடித்த டிராவிஸ் 114 ரன்னில்  வெளியேறினார். அதனால் ஆஸ்திரேலியா 155.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 467 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

ஜேம்ஸ் பட்டின்சன் 14 ரன்னுடன் களத்தில் இருந்தார். நியூசிலாந்தின் நெயில் வாக்னர் 4, டிம் சவுத்தீ 3, டீ கிராண்டுஹோம்2, டிரெனட் போல்ட் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து தட்டு தடுமாறி ரன் சேர்க்க தொடங்கியது.  தொடக்க ஆட்டக்காரர் டாம் பிளண்டெல் 15 ரன் எடுத்திருந்தபோது  கம்மின்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிம் பெயினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன்னும்  பட்டின்சன் பந்துவீச்சில்  டிம் பெயினிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  அதனால் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து  18 ஓவருக்கு 2விக்கெட்களை இழந்து 44 ரன் எடுத்துள்ளது.  டாம் லாதம் 9, ராஸ் டெய்லர் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.  ஆஸ்திரேலியாவை விட 423 பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 3வது நாளான இன்று முதல் இன்னிங்சை  தொடர உள்ளது.

Tags : Boxing Day Test ,New Zealand , Boxing Day Test, Australia, New Zealand
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்