×

இந்து என்பதால் ஒதுக்கப்பட்டேன்: பாக். வீரர் தானிஷ் கனேரியா

கராச்சி: பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் சில நாட்களுக்கு முன்பு , ‘தானிஷ் கனேரியா(39) ஒரு இந்து என்பதால் அணியில் புறக்கணிக்கப்பட்டார். அவருடன் சாப்பிட கூட பல வீரர்கள் விரும்பியதில்லை. இங்கிலாந்து தொடரை வெல்ல அவர்தான் காரணம். ஆனால் அதற்கான பாராட்டு அவருக்கு கிடைக்கவில்லை’ என்றார். இது குறித்து கருத்து தெரிவித்த தானிஷ் கனேரியா, ‘சோயிப் அக்தருக்கு நன்றி. அவர் உண்மையைதான்  பேசுவார். பாகிஸ்தான் அணியில் சில வீரர்கள் என்னை ஒதுக்கியது உண்மைதான். அவர்கள் பெயர்களை சொல்ல எனக்கு தயக்கமில்லை. அப்போது அவர்கள் புறக்கணிப்பை நான் கண்டுக்கொள்ளவில்லை. என் கவனம் பாகிஸ்தான் வெற்றியில்தான் இருந்தது.  நான் விளையாடிய காலத்தில் சோயிப் அக்தர், இன்சாம் உல் ஹக், யூசப்  யூஹான்(இப்போது முகமது யூசப்), யூனிஸ்கான் ஆகியோர் ஆதராவாக இருந்தனர்.

 இந்து என்பதால் புறக்கணிக்கப்பட்டேன். ஆனால் யாரும் என்னை மதம் மாற கட்டாயப்படுத்தவில்லை. நான் இந்து என்பதற்காகவும், பாகிஸ்தானி என்பதற்காகவும் பெருமை கொள்கிறேன். பாகிஸ்தான் என் ஜென்மபூமி. இப்போது வாழ்க்கை நன்றாக இல்லை. மிகவும் பிரசை–்னயில் இருக்கிறேன். எனக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும், உலகில் உள்ள மற்ற கிரிக்கெட் வீரர்களும் உதவி செய்ய வேண்டும்’’ என்றார்.  பாகிஸ்தான் அணிக்காக 2000முதல்2010ம்ஆண்டு வரை விளையாடி உள்ளார். அவர் 61 டெஸ்ட்களில் விளையாடி 261 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேட்ச் பிக்சிங் பிரச்னையில் 2012 ஆண்டு ஆயுள் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்களில் தனேஷ் கனேரியாவும் ஒருவர்.

அந்த பிரச்னையில் இருந்து விடுபட, தன்னை நிரபராதி என்ற நிரூபிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நாடினார். இந்து என்பதால் அவருக்கு வாரியம் உதவவில்லை என்பதும் குற்றச்சாட்டு.  இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர், ‘சோயிப், கனேரியா இருவரும் ஓய்வு பெற்ற வீரர்கள். அவர்கள் அது வேண்டுமானாலும் பேசலாம். செய்யலாம். அது அவர்கள் விருப்பம்’ என்று கூறியுள்ளார்.

Tags : Pak ,Tanish Kaneria ,player , Indian, Pakistani player tanis kaneriya
× RELATED பாக்.கில் சரப்ஜித் சிங் கொலையில் தொடர்புடைய குற்றவாளி கொலை