×

ஏடிஎம்மில் பணம் எடுக்க ஒரு முறை பாஸ்வேர்டு

புதுடெல்லி: ஏடிஎம்மில் ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் பணம் எடுக்கும் நடைமுறையை பாரத ஸ்டேட் வங்கி  ஜனவரி முதல் செயல்படுத்த உள்ளது.  டெபிட் கார்டு மூலம் மோசடிகள் நடப்பதை தடுக்க, ஒரு முறை பாஸ்வேர்டு நடைமுறை கொண்டுவரப்பட்டது. ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு இது பின்பற்றப்படுகிறது. இதுபோல், ஏடிஎம்மில் ஒரு முறை பாஸ்வேர்டு வசதியை ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறை படுத்த உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.  பண மோசடி நடப்பதை தடுக்க, பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் இரவு 8 மணி முதல் மறு நாள் காலை 8 மணி வரை 10,000க்கு மேல் பணம் எடுக்க முயற்சித்தால், வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு ஒரு முறை பாஸ்வேர்டு வரும். இதை உள்ளீடு செய்தால் மட்டுமே ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும்.  இதனால், வாடிக்கையாளரின் கார்டை பயன்படுத்தி, அவரது அனுமதியின்றி வேறு யாரும் பணம் எடுக்க முடியாது. எஸ்பிஐ கார்டு பயன்படுத்தி வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க ஒருமுறை பாஸ்வேர்டு நடைமுறை பொருந்தாது என இந்த வங்கி தெரிவித்துள்ளது.

Tags : ATM , ATM , password
× RELATED கிருஷ்ணகிரியை அடுத்த...