×

வட மாநிலங்களில் இந்தாண்டு மட்டும் வெள்ளத்தில் சிக்கி 1,900 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவின் வடமாநிலங்களில் ஏற்பட்ட புயல், வெள்ளம் பாதிப்பால் மட்டும் இந்த ஆண்டு 1,900 பேர் இறந்ததாகவும், 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டை தளமாகக் கொண்ட கிறிஸ்டியன் எய்ட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:  இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் ‘ஃபானி’ புயலால் சுமார் 10 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) டாலர் அதாவது சுமார் ரூ. 6,500 கோடி அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், 10 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) மரங்களை சாய்த்துள்ளது. ‘ஃபானி’ புயல் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் அதிகளவு நிலச்சரிவை ஏற்படுத்திய வலிமையான புயல். இந்தியா மற்றும் வங்கதேசத்தை 2019 மே 2 முதல் 4ம் தேதி வரை தாக்கியது.

அப்போது மணிக்கு 200 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் இருந்தது. மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட புயல், வெள்ளத்தால் ஆசியாவில் மட்டும் 28 பில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தியது. ‘ஃபானி’ சூறாவளி புயல் இந்தியாவையும் வங்கதேசத்தையும் தாக்கியது. சீனாவின் சில பகுதிகள் 60 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மழை பெய்தது. இந்தியாவின் வட மாநிலங்களில் வழக்கமான பருவமழையை விட அதிக மழை பெய்தது. புயல், வெள்ளத்தால் 1,900 பேர் இறந்துள்ளனர். இதற்கு காரணம், வளிமண்டலம் வெப்பமாக மாறி வருவதுதான். உலகம் இதுவரை 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு முந்தைய காலங்களிலிருந்து அதிகமாக வெப்பமடைந்துள்ளது. அதனால், உலகெங்கிலும் மழையின் அளவு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கணிக்க முடியாத மற்றும் தீவிர மழைப்பொழிவின் போக்கு, காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வருகிறது. ஃபானி புயலால் இந்தியா, வங்கதேசத்தில் மட்டும் 3.4 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். ஒடிசாவில் மட்டும் 1,40,000 ஹெக்டேர் பயிர் நிலங்கள் சேதமடைந்துள்ளன. காலநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மக்கள் புயல், வெள்ளத்தை எதிர்கொள்கின்றனர். புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலமும், உமிழ்வதன் மூலமும் வளிமண்டலம் வெப்பமாகி வருகிறது. அதனால், வெள்ளத்தின் அச்சுறுத்தல் அதிகமாக வருகிறது. வெப்பமான கடல் நீர், அதற்கு கிடைக்கக்கூடிய ஆற்றலை அதிகரித்து, அது வலிமையை உருவாக்க அனுமதிக்கிறது. மேலும், வெப்பமான காற்று வெப்பநிலையை வைத்திருக்கவும், அது கடலில் இருக்கும்போது புயல் எழுச்சியை அதிகரித்தும் வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : floods ,states ,India ,Northern Territory ,Storm , India, Northern Territory, Flood, Storm, 1,900 killed
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி