×

புதுக்கோட்டை அருகே திருடப்பட்ட வாக்குப்பெட்டி மீட்பு; மதுபோதையில் திருடிவிட்டதாக விசாரணையில் தகவல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடி பின்பக்க கதவை உடைத்து திருடப்பட்ட வாக்குப்பெட்டி பத்திரமாக மீட்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பெரிய முள்ளிப்பட்டியில் வாக்குச்சாவடி பின்பக்க கதவை உடைத்து காவலர்களை தள்ளிவிட்டு வாக்குப்பெட்டியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருடிச்சென்ற 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் வாக்குப்பெட்டியை திருடிவிட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.


Tags : Inquiries ,Pudukkottai ,Local Elections , Pudukkottai, Local Elections, Ballot Theft, Alcohol Drugs, 2 Arrested
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...