×

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு: கேரள அரசு ஒப்புதல்

திருவனந்தபுரம்: இஸ்ரோ முன்னாள்  விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடாக 1 கோடியே 30 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான தகவலை பாகிஸ்தானுக்கு அளித்ததாக குற்றம்சாட்டி தேச துரோக வழக்கில் கடந்த 1994-ஆம் ஆண்டில் நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். அன்றைய சூழலில், அது மிகுந்த பரபரப்பு உடைய செய்தியானது.  இதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில் நிரபராதி  என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது. எனவே சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி நீதி மன்றத்தில் அவர் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை முடித்துக்கொள்ளும் வகையில் நம்பி நாராயனுக்கு இழப்பீடாக 1 கோடியே 30 லட்சம் வழங்க கேரள அமைச்சரவை கொள்கை ரீதியான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் பின்னணி:

இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக கடந்த 1994 ஆம் ஆண்டில் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அன்றைய சூழலில், அது மிகுந்த பரபரப்பு உடைய செய்தியானது.மாலத்தீவு பெண்கள் இருவர், மற்றொரு விஞ்ஞானி உள்ளிட்டோரும் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். அப்போதைய கேரள காவல்துறை தலைவர் சிபி மாத்யூஸ், அன்றைய காவல் கண்காணிப்பாளர்கள் ஜோஷுவா, விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அதில், நம்பி நாராயணன் உள்ளிட்டோருக்கு எதிரான கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, இரண்டு மாத சிறைவாசத்துக்கு பின் நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டார்.இந்த பொய் வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 1998 ஆம் ஆண்டில் கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே, தான் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நம்பி நாராயணன் வழக்கு தொடுத்தார். இதில் அவருக்கு 1 கோடியே 30 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

Tags : Nambi Narayanan Nambi Narayanan ,ISRO ,Rs , ISRO, Scientist Nambi Narayanan, Compensation, Government of Kerala Approved
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...