×

புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் நாகநாதசுவாமி கோயில்: பல்வேறு அதிசயங்களும், அபிஷேகங்களும் நடக்கும் திருக்கோவில்

ராகு கேது மற்றும் சட்ப தோஷத்தால் திருமணம் நடைபெறாமல் இருப்பவர்களும், பிள்ளைபேரு இல்லாதவர்களும் வழிப்பட்டால் உடனடியாக தடைகள் நீங்கி அருள் வழங்கும் நாகநாத சுவாமி திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலானது கி.பி பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த திருக்கோவில் என்றும் பின்னர் 12 மற்றும் 13-ஆம் ஆண்டில் ஆட்சி செய்த பாண்டிய மன்னரால் புதுப்பிக்கப்பட்டது என ஸ்தலவரலாறு கூறுகிறது. கிழக்கு கோபுரம் கொண்டு
இக்கோவில் அமையப் பெற்றுள்ளது. தந்தையின் காலை சிதைத்த சண்டிகேஸ்வரர் தன் தீவினை நீங்க பேரையூரில் வந்து தவம் செய்து தீவினை நீங்கியதாகவும், பிரம்மதேவன் தான் நீராடுவதற்காகவே பல புண்ணிய தீர்த்தங்களை வருவித்து இத்திருக்குளத்தில் சேர்த்து அதில் தீர்த்தமாடி பிறைவுடன் காட்சியளித்த சிவபெருமானை
வணங்கியயிடம் இந்த பேரையூர் என்றும் வரலாறு கூறுகிறது.

இத்திருத்தலத்தில் வழிபடுவோர்  யாராயினும் தனம், தானியம், மனைவி, மக்கள் முதலிய   எல்லாப்பலாப்பலன்களையும் பெற்று உய்ய  வேண்டும் என்று பிரம்மதேவனோ சிவபெருமானை வேண்டியதாக கூறப்படுகின்றது. இத்திருத்தலத்தின் திருக்குளத்திலிருந்து சித்திரை மாதத்தில் கோவிலில் ஒலிக்கப்படும் இசைக்கருவிகளின் ஒலி இன்றும் கேப்பதாக கூறப்படுகிறது. மேலும் எந்த சிவன் கோவிலிலும் இல்லாத வகையில் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவே வள்ளிதெய்வானை முருகப்பெருமான் அருள் பாலித்து வருகின்றார். தினமும் ராகு கால நேரத்தில் நாகநாத சுவாமிக்கு பாலால் அபிஷேகமும், அர்ச்சனைவும் செய்து வழிப்பட்டால் தோஷம் நீங்கி திருமணம் மற்றும்குழந்தைப்பேறு தடைநீங்கும்  என்பது ஐதீகம். இக்கோவில் வளாகத்தில் உள்ள தென்னை மரம் மற்றும் பல மரங்களும் பாம்பு போல வளைந்து நெளிந்து உயர்ந்து நிற்பது பெரும் ஆட்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. கோவிலின் மூலவராக நாகநாத சுவாமி அருள் பாலித்து வருகின்றார். அம்பாளோ ப்ரகந்தாம்பாள் என்ற நாமத்தில் அருள்பாலிக்கின்றார். சித்தி விநாயகர், குரு தட்சணாமூர்த்தி, ஞானபாலதண்டாயுதபாணி, கஜலட்சமி, துர்க்கையம்மன், கால பைரவர், நவகிரகங்கள், வள்ளி தெய்வானை, பாலசுப்ரமணியரும் இவ்விடம் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 

Tags : Periyakkodai District Paraiyur Naganathaswamy Temple , Pudukkottai District, Peraiyur, Naganathaswamy Temple, Wonders, Abhishekam, Thirukkovil
× RELATED தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாறாக...