×

திருவலம் அருகே அம்முண்டி பாலாற்று பகுதியில் தொடரும் மணல் கொள்ளை

*நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்

திருவலம் : திருவலம் அடுத்த அம்முண்டி பாலாற்று பகுதியில் தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த அம்முண்டி பாலாற்று பகுதியில் லாரிகள், மினிலாரி, மாட்டு வண்டியில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனால், ஆற்றுப்பகுதியில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு கடந்த சில நாட்களாக முன்பு பெய்த மழையில் மழைநீர் குட்டைகள் போல் தேங்கி கிடக்கிறது.

மேலும், ஆற்றில் மணல் அள்ளப்படும் இடத்திற்கு அருகே வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் குடியிருப்பு பகுதிகளான திருப்பாகுட்டை, குப்பத்தாமோட்டூர், அம்முண்டி, தொப்ளாமோட்டூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் சப்ளைக்காக பம்பு அவுஸ் அமைப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அப்பகுதியில் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆற்றில் அதிகளவு மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாலும், வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அலட்சியம் காட்டி வருகிறார்களாம். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Thiruvalam ,desert ,Ammundi ,Sand Robbery ,area , Sand Robbery,Thiruvalam ,paalaru, ground water level
× RELATED ஊராட்சி செயலாளர் வீட்டில் விஜிலென்ஸ்...