×

கார்கில் போரில் சிறப்பாக செயல்பட்ட மிக் -27 போர்விமானம் இன்றுடன் ஓய்வு

ஜெய்ப்பூர் : இந்திய விமானப்படையில் இருந்து மிக்-27 போர்விமானம் ஓய்வு பெறுகிறது.  இந்திய விமானப் படையில், முப்பது ஆண்டுகளாக சேவை செய்து, கார்கில் போரில், எதிரிகள் மீது குண்டுமழை பொழிந்த, மிக்-27 போர் விமானம், இன்றுடன் ஓய்வு பெற்றது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் உள்ள விமான படை தளத்தில், மிக்-27, இன்று இறுதியாக பறந்து, பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியது. இதையொட்டி நடைபெற உள்ள விழாவில், ஏர் மார்ஷல் எஸ்.கே. கோட்டியா உள்ளிட்ட விமானப் படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இது குறித்து இந்திய விமானப் படை, கூறியதாவது; கடந்த,1985ல், மிக்-27 போர் விமானம், விமானப் படையில் சேர்க்கப்பட்டது. இந்தப் போர் விமானம், தரைப் படைக்கு பக்க பலமாகவும், துல்லியமாக குண்டு வீசி, எதிரிகளின் அழிக்கும் திறன் கொண்டது. கடந்த, 1999-ல் நடைபெற்ற கார்கில் போரில், மிக் -27 சிறப்பாக செயல்பட்டு, பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தகர்த்தது. மணிக்கு ஆயிரத்து 700 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட விமானம், 4 ஆயிரம் கிலோ வெடிபொருட்களை தாங்கி சென்று தாக்கும் வல்லமை படைத்தது.

கிட்டதட்ட 40 ஆண்டுகாலம் நமது வான் எல்லை பாதுகாவலனாக இருந்த மிக் 27 போர் விமானங்களுக்கு படிப்படியாக ஓய்வளிக்கப்பட்ட நிலையில் கடைசி ஸ்குவாட்ரானில் உள்ள 7 விமானங்களும் இன்றுடன் ஓய்வு பெறுகின்றன. மேலும் இந்திய விமான படை விமானிகளால் பகதுார் என, செல்லமாக அழைக்கப்படும், மிக்-27  போர் விமானம், இறுதியாக விடைபெறுகிறது.

Tags : Indian Air Force ,Station Jodhpur , Indian Air Force, MiG-27 ,retires ,water salute ,Air Force Station Jodhpur
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...