வாக்களிக்க சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லை.... கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதம்

சென்னை : தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல நூற்றுக்கணக்கான மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். ஆனால் இரவு நேரத்தில் போதிய பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை எனக்கூறி அங்கிருந்த காவல்துறையினரிடம் அவர்கள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அப்போது பேட்டியளித்த பயணிகள், உள்ளாட்சித் தேர்தல் காரணமாக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்காக சொந்த ஊர் புறப்பட்டு செல்வதாகவும் ஆனால் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து இல்லாததால் மணிக்கணக்கில் காத்து நிற்பதாகவும் வேதனை தெரிவித்தனர். தேர்தல் நேரத்தில் கட்டாயம் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள் என்று கூறும் அரசு சிறப்பு பேருந்தை இயக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

Related Stories: