×

ராணுவ பயிற்சியில் 2 வீரர்கள் உயிரிழப்பு

புனே: புனேயில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட 2 வீரர்கள் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ராணுவ பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு ராணுவ வீரர்கள் தினமும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று இங்கு தற்காலிக பாலம் கட்டுமான பயிற்சி நடந்தது. இதில் ஏற்பட்ட விபத்தில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் புனேயில் உள்ள மருத்துமவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வீரர்கள் மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags : soldiers , Military training, 2 soldiers, casualties
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து