×

முத்தமிட முயன்றவரின் உதட்டை பதம் பார்த்த பாம்பு

பத்ராவதி: நல்ல பாம்பை முத்தமிட முயன்ற பாம்பு பிடாரனின்  உதட்டை பாம்பு கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பத்ராவதியில் ஒரு வீட்டில் நல்லபாம்பு புகுந்தது. இது குறித்து பாம்பு பிடாரன் சோனு என்பவருக்கு தவகல் கொடுக்கப்பட்டது. அவர் வந்து பாம்பை பிடித்து சிறிது நேரம் விளையாட்டு காட்டினார். பிறகு பாம்பின் முன் பக்கம் உதட்டோடு உதடாக முத்தமிட முயன்றார். அப்போது பாம்பு அவர் உதட்டை கடித்து பதம்பார்த்துவிட்டது.

உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது சோனு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாம்பின் பின்பக்கத்தில் இருந்து தான் முத்தமிட வேண்டும். முன்பக்கம்  முத்தமிடுவது அனுபவமில்லாதவர்களின் செயலாகும் என்று பாம்புபிடி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Lip, butt, snake, trying to kiss
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...