×

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டமைப்பினர் கடலூரில் கடலில் இறங்கி போராட்டம்

கடலூர்: சாகர் மாலா-ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டமைப்பினர், அத்திட்டங்களை கைவிட வலியுறுத்தி நேற்று கடலூர் சில்வர் பீச் கடலில் இறங்கி மனித சங்கலி போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்ட சாகர் மாலா-ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பினர் சுனாமி நினைவு தினத்தை நேற்று அனுசரித்தனர். கடலூர் பெரியார் அரசு கல்லூரியிலிருந்து மவுன ஊர்வலமாக சென்று கடலில் பாலூற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அதன்பின், கடல் அலைகளின் நடுவே கைகளை கோர்த்தவாறு நின்று மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், ‘காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மீன்பிடி விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும். சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் அழிவு திட்டங்களை கைவிட வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து வங்கி கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். காவிரி கொள்ளிடம், தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறுகளில் தடுப்பணை படுக்கையணைகளை கட்டி மழை நீரை சேகரிக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags : sea ,federations ,Cuddalore , Hydrocarbon, resistance, Confederates, Cuddalore, down to sea, struggle
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...