×

வக்கீல் வீடுகளுக்கு வழக்கு பட்டியல் அனுப்புவது நிறுத்தம்: ஐகோர்ட் தலைமை பதிவாளர் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமனறத்தில் 40 மேற்பட்ட அமர்வுகள் உள்ளன. இந்த அமர்வுகளில் விசாரணைக்கு வரும் வழக்குகளின் பட்டியல் முதல் நாள் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் வழக்கறிஞர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். சென்னை உயர்நீதிமன்றம் தொடக்கப்பட்ட காலத்திலிருந்து இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த நடைமுறையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி வழக்கறிஞர்களின் வீடுகளுக்கு வழக்கு பட்டியல் அனுப்பும் நடைமுறை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அனைத்து வழக்கறிஞர்கள் சங்த்திற்கும் தலைமை பதிவாளர் சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.

ஐகோர்ட் முழு நீதிபதி அமர்வில் எடுக்கப்பட்ட முடிவின் படி இது நடைமுறைபடுத்தபடுவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் கூறுகையில், “பயனுள்ளதாக உள்ள இந்நடைமுறையை நிறுத்துவது ஏற்க கூடியது அல்ல” என்றார். பார் கவுன்சில் உறுப்பினரும் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைரும் பால் கனகராஜ் கூறுகையில், இது வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு செலவை ஏற்க தயராக உள்ள நிலையில் உயர் நீதிமன்றம் இது போன்ற முடிவை எடுத்து இருப்பது ஏற்க தக்கது அல்ல என்றார். இதே போல் லா அசோஷிசியன் தலைவர் செங்குட்டுவன், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி லூயிஸ்ஆல் ரமேஷ், முன்னாள் தலைவிகள் பிரசன்னா, நளினி உள்ளிட்ட வழக்கறிஞர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Tags : lawyer houses ,Chief Registrar ,Icort , Advocate Home, Case List, Parking, Icort Chief Registrar, Order
× RELATED சிவில் நீதிபதி நேர்முக தேர்வுக்கு தடை...