×

தமிழகம் முழுவதும் 4,603 நூலகங்களிலும் பயன்படுத்த முடியாமல் கிழிந்த புத்தகங்கள் கணக்கெடுப்பு: அதிகாரிகள் தகவல்

வேலூர்: நூலகங்களில் பயன்படுத்த முடியாமல் கிழிந்து போன முதல் 1,000 புத்தகங்கள் கணக்கெடுக்கப்பட்டு அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 4 ஆயிரத்து 603 பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. இதில்  ஆயிரத்து 753 நூலகங்கள் சொந்தக் கட்டிடங்களிலும், 2 ஆயிரத்து 516 நூலகங்கள் இலவசக் கட்டிடங்களிலும், 320 நூலகங்கள் வாடகைக் கட்டிடங்களிலும் இயங்கி வருகிறது. மேலும் 14 நடமாடும் நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த  நூலகங்களிலும் கலை, அறிவியல், இலக்கியம், தமிழ், பண்பாடு, பாரம்பரியம், போட்டி தேர்வுகள், ஆராய்ச்சி புத்தகங்கள், வரலாறு, கணிதம் உள்ளிட்ட பல லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. தினமும் ஆசிரியர்கள், மாணவர்கள்,  பொதுமக்கள் என்று அதிகளவில் வந்து புத்தகங்களை வாசித்துவிட்டு செல்கின்றனர்.

இதில் மிகவும் பழமைவாய்ந்த நிலையில், பயன்படுத்தவே முடியாது என்ற நிலையில் உள்ள முதல் 1,000 புத்தகங்கள் ஒவ்வொரு நூலகங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வேலூர் மாவட்ட மைய நூலகத்திலும் கிழிந்து  போன பழைய புத்தகங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அந்த புத்தகங்களை அகற்றி அதற்கு மாற்றாக புதிய புத்தகங்கள் வைக்கப்படும் என்று நூலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : libraries ,Tamil Nadu ,country , Tamil, Libraries, Torn Books survey
× RELATED தமிழ்நாடு மக்கள் மீது நான்...