×

அமைச்சரவைக்கும், நிர்வாகத்துக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடு எவ்வாறு ஜனநாயக விரோதமாகும்? கவர்னர் கிரண்பேடி கேள்வி

புதுச்சேரி: அமைச்சரவைக்கும், நிர்வாகிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும்போது மத்திய அரசு கொள்கையை முடிவு செய்கிறது. இதை எவ்வாறு ஜனநாயக விரோதம் என்று சொல்ல முடியும்?’ என்று  கவர்னர் கிரண்பேடி ேகள்வியெழுப்பி  உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 23ம் தேதி புதுச்சேரி வருகை  தந்தார். அப்போது முதல்வர் நாராயணசாமி அவரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.  அதில், ‘புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி கொடுப்பதை கவர்னர் தடுக்கிறார்.  மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும்  கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும்’ என்று கேட்டு கொண்டிருந்தார். இதற்கு கவர்னர் கிரண்பேடி பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியருப்பதாவது:  அரசுக்கு  நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும்போது, மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டு தீர்வு காணலாம்.  

நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத்தின்கீழ் இந்த நடைமுறை இருக்கிறது. கொள்கை ரீதியிலான விஷயத்தில் அமைச்சரவைக்கும், நிர்வாகிக்கும் கருத்து  வேறுபாடு ஏற்படும்போது மத்திய அரசு கொள்கையை முடிவு செய்கிறது. இதை எவ்வாறு ஜனநாயக விரோதம் என்று சொல்ல முடியும்?  இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.

Tags : Grunapedi ,cabinet ,administration , Cabinet, Administration, Governor
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...