×

விளையாட்டு துளிகள்

டோக்ரா இரட்டை சதம் வெற்றி விளிம்பில் புதுச்சேரி:
கொல்கத்தா: புதுச்சேரி-மிசோரம்  அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை லீக் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில்  மிசோராம் 73ரன்னுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய புதுச்சேரி நேற்று முன்தினம்  ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்திருந்தது. நேற்று களத்தில் இருந்த அருண் கார்த்திக் 86ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து பரஸ் டோக்ராவுடன் ஜோடி சேர்ந்த சுரேஷ்குமார் அதிரடியாக விளையாடினார். டோக்ரா   இரட்டை சதம்(200ரன்) அடித்து ஆட்டமிழந்தார். கூடவே சுரேஷ்குமார் ஆட்டமிழக்காமல் 86 பந்துகளில் 103 ரன் அடிக்க புதுச்சேரி வலுவான எண்ணிக்கையை எட்டியது. அதனையடுத்து புதுச்சேரி  86ஓவரில் 5 விக்ெகட் இழப்புக்கு 458  ரன்னுக்கு முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. எனவே 2வது இன்னிங்சை தொடர்ந்த மிசோரம் நேற்று மாலை ஆட்ட நேர முடிவில் 11ஓவருக்கு  4 விக்கெட் இழந்து 30 ரன் எடுத்துள்ளது. இன்னும் 6 விக்கெட்கள் கைவசம் இருந்தாலும் 355  ரன் பின்தங்கியுள்ள மிசோராம் இலக்கை எட்டுவது சிரமம். அதனால் புதுச்சேரி ஹாட்ரிக் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

ஆசியலெவன் டி20 பாகிஸ்தான் வீரர்களுக்கு வாய்ப்பில்லை
வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரகுமானின் நூற்றாண்டு விழா மார்ச் மாதம் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக உலக லெவன்-ஆசிய லெவன் அணிகள் மோதும் 2 டி20 போட்டிகளை நடந்த வங்கதேச கிரிக்கெட்  வாரியம் திட்டமிட்டுள்ளது. இதில் ஆசிய அணியில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் வீரர்களுடன், பாகிஸ்தான் வீரர்களும் இடம் பெறுவார்களா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் பிசிசிஐ  இணை செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ்  நேற்று, ‘ஆசிய லெவன் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் இணைந்து விளையாடும் சூழல் ஏற்படாது. ஏனென்றால்  ஆசிய லெவன் அணியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்கள் யாரும் அழைக்கப்பட மாட்டார்கள்’ என்று சந்தேகத்திற்கு  முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்தியா யு19 வெற்றி:
தென் ஆப்ரிக்கா-இந்தியா இடையே 19வயதுக்கு உட்பட்ட  அணிகள் மோதும்  ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தெ.ஆப்ரிக்காவின் ஈஸ்ட் லண்டனில் நேற்று நடந்த முதல் போட்டியில்  இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது.

Tags : Puducherry , Dogra, Double Century, Puducherry
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது