×

சென்னை ஏடிவிஷன் ஹாக்கி அரையிறுதியில் எஸ்டிஏடி

சென்னை: சென்னையில் ஏ டிவிஷன் ஹாக்கித் தொடரின் முதல் காலிறுதிப் போட்டியில் நேற்று  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(எஸ்டிஏடி)-ஆர்வி அகடமி அணிகள் மோதின. ஆரம்பம் முதலே அசத்தலாக விளயைாடிய  எஸ்டிஏடி அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்தபடியே இருந்தனர் அதனால் ஆட்ட நேர முடிவில்  எஸ்டிஏடி 10-0 என்ற கோல் கணக்கில் ஆர்வி அகடமியை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது. அந்த அணியின்  சுந்தரபாண்டி, மாரிஸ்வரன் ஆகியோர் தலா 3, அஜித்குமார், வினோத், விஜயகுமார், விக்னேஷ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இன்று நடைபெறும் 2வது காலிறுதிப் போட்டியில் பாரத ஸ்டேட் வங்கி-யுனிவர்சல் மனமகிழ் மன்றம்  அணிகளும், 3வது காலிறுதிப் போட்டியில்  இந்திய ரிசர்வ் வங்கி-மெட்ராஸ் நேஷனல் விளையாட்டு மன்றம் அணிகளும் விளையாட உள்ளன.

Tags : SDAT ,semifinals , Chennai Aviation Hockey Semifinals, STAT
× RELATED ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மின்டன்:...