×

பாக்சிங் டே டெஸ்ட் நியூசிக்கு எதிராக ஆஸி 257/4

மெல்பர்ன்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில்  ஸ்மித், மார்னசின்  அரை சதத்தால் ஆஸ்திரேலியா  4விக்கெட் இழப்புக்கு 257 என்ற கவுரவமான எண்ணிக்கையை தொட்டது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து  இடையிலான ஐசிசி சாம்பியன்ஷிப்  டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் ‘பாக்சிங் டே’ நாளான நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை  தேர்வு செய்தது.  காயம் காரணமாக ஓய்வில் இருந்த நியூசி. பந்து வீச்சாளர் டிரெனட் போல்ட் முதல் ஓவரிலேயே ஆஸி.க்கு அதிர்ச்சி தந்தார். அவர், தொடக்க ஆட்டக்கார் ஜோ பர்ன்சை கிளீன் போல்டாகி வெளியேறினார். அதன்பிறகு டேவிட்  வார்னருடன் ஜோடி சேர்ந்த  மார்னஸ் லாபஸ்சேஞ்ச் நிதானமாக விளையாட தொடங்கினார். வழக்கம் போல் அதிரடி காட்ட முயன்ற வார்னர் 41 ரன்னில்  வாக்னர் பந்து வீச்சில்  சவுத்தீயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த மார்னஸ் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். மார்னசை ஆட்டமிழக்க செய்த டீ கிராண்டுஹோம்,  அடுத்து மாத்யூ வாட்ைடயும் 38 ரன்னில் வெளியேற்றினார். அப்போது அணியின் ஸ்கோர் 4  விக்கெட் இழப்புக்கு 216ரன். அதன் பிறகு கடைசி 16 ஓவருக்கு நியூசி பந்து வீச்சாளர்கள் மாறிமாறி வீசியும் பலனில்லை. மார்னஸ், ஸ்மித் அடித்த அரை சதத்தால் ஆஸி. கவுரவமான ஸ்கோரை எட்டியது.   முதல்நாள் ஆட்ட நேர முடிவில்  ஆஸ்திரேலியா 90ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன் எடுத்தது.  ஸ்மித் 77, டிராவிஸ் ஹெட் 38 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கைவசம் இன்னும் 6 விக்கெட்கள் மிச்சமிருக்க, ஆஸி. 2வது நாளான இன்று தொடர்ந்து முதல் இன்னிங்சை  விளையாட உள்ளது.


Tags : Boxing Day Test ,Aussie ,New York , Boxing Day Test, New Zealand, Australia 4
× RELATED நான் ரெடி தான்… கம்மின்ஸ் உற்சாகம்