×

ஜார்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழா மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

சென்னை: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்களிலும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதாக கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு 41 இடங்கள் தான் தேவைப்பட்டது.

ஆனால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவிடம் 47 இடங்கள் இருந்தது. இதையடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் வருகிற 29ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணியளவில் பதவியேற்கிறார்.
இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் வருகிற 29ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்துள்ளார். பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Jharkhand CM ,MK Stalin Jharkhand CM ,MK Stalin , Jharkhand CM's ,swearing-in calls, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...