×

எம்டிசியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள் பணிமனையிலேயே ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்கலாம்

* போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் அறிவிப்பு

சென்னை: மாநகர போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தங்களது ஆயுட்கால சான்றிதழை பணிமனையிலேயே சமர்ப்பிக்கலாம் என்று போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் கணேசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 22,500 மேற்பட்ட பணியாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள்  பணியாற்றி வருகிறார்கள். மாநகர போக்குவரத்துக் கழகத்தில், ஏறத்தாழ 13,500க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்றோருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் வாயிலாக, ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வூதியதாரர்கள், ஒவ்வொரு ஆண்டும், தங்களது ஆயுட்காலச் சான்றிதழை போக்குவரத்துகழகத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்து வருகிறார்கள்.
ஓய்வுபெற்றோரின் வயது முதிர்வு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, தங்களது ஆயுட்காலச் சான்றிதழை இனிவரும் காலங்களில், தாங்கள் கடைசியாக பணியாற்றி, ஓய்வுபெற்ற அலுவலகம், பணிமனையிலேயே சமர்ப்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் 2020ம் ஆண்டிற்கான ஆயுட்காலச் சான்றிதழை, வரும் ஜனவரி திங்கள் தொடங்கி, மார்ச் திங்கள் 15ம் தேதிக்குள், அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தலைமையகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தலைமையகத்திலும், பட்டுலாஸ் சாலை தொழிற்கூடத்தில்  மண்டல தொழிற்கூடத்தில், ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், அந்தந்த அலுவலகத்தில் ஆயுட்கால  சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், கே.கே.நகர் பயணச்சீட்டு அச்சகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் கே.கே.நகர் பணிமனையிலும், குரோம்பேட்டை பேருந்து கூடுகட்டும் பிரிவில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் குரோம்பேட்டை-1 பணிமனையிலும் தங்களின் ஆயுட்கால  சான்றிதழை சமர்ப்பிக்கலாம். விடுபட்டவர்கள் தலைமையலுவலகத்தினை அணுகி, தங்களின் ஆயுட்காலச்  சான்றிதழை சமர்ப்பிக்கலாம். ஓய்வூதியப் பிரிவு 044-2345 5801 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Retirees ,workplace ,MDC ,MTC , Retirees,MTC , lifetime certificate , workplace
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...