×

எவ்வித ஆவணமும் இல்லாமல் ரயிலில் ஓசி பயணம் செய்யும் மாநில போலீஸ் மீது நடவடிக்கை: ரயில்வே நிர்வாகம் அவசர சுற்றறிக்கை

வேலூர்: ரயில்களில் எவ்வித ஆவணமும் இன்றி  ஓசியில் பயணிக்கும் மாநில போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே நிர்வாகம் அந்தந்த மண்டல ரயில்வே வணிக மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய ரயில்வே பயணிகள் ரயில்களில் நூற்றுக்கு 10 சதவீதம் பேர் பயண சீட்டின்றி பயணித்து வருகின்றனர். அதேநேரத்தில் ரயில்களில் ராணுவம், காவல்துறை, துணை ராணுவப்படையினர், ரயில்வே பாதுகாப்புப்படையினர் ஆகியோருக்கு தொழில்ரீதியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் மாநில போலீசார் அவ்வபோது குற்றவாளிகளை பிடித்து வருதல், கோர்ட் பணி உள்ளிட்ட பணிகளுக்காக ரயில்களில் பயணிக்க உயர்அதிகாரிகளால் அனுதிச்சீட்டு வழங்கப்படுகிறது. அந்த அனுமதி சீட்டில் சம்பந்தப்பட்ட காவலரின் அனைத்து விவரங்களுடன், பயணிப்பதற்கான காரணமும் கூறப்பட்டிருக்கும். இந்நிலையில், இச்சலுகையை போலீசார் சிலர் தவறாக பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து ரயில்வே நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்கள், நிலைய மேலாளர்கள், வணிக மேலாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அதில், ‘அந்தந்த மாநில போலீசார் ரயில்களில் பயணிக்கும் போது உரிய சீருடையுடன் அடையாள அட்டை, பணி அனுமதி சீட்டு அல்லது டிக்கெட் என எந்த ஆவணமும் இன்றி இருந்தால் சம்பந்தப்பட்ட ரயில் டிக்கெட் பரிசோதகர் அல்லது ஸ்குவாட் டிக்கெட் பரிசோதகர் அவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வணிக மேலாளர்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : state police ,Oci , Without document, OC on train, travel, state police, action, railway administration, emergency circular
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...