×

கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கத்தில் புதர்கள் நடுவே சுடுகாடு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் நடுவே சுடுகாடு உள்ளதால் சடலத்தை அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்காக  மங்காவரம்   செல்லும் வழியில் சுடுகாடு உள்ளது. தற்போது இந்த சுடுகாட்டை பராமரிக்காமல் விட்டுவிட்டதால் புதர்கள் மண்டி சுகாதாரமற்ற முறையில் உள்ளது. ஆங்காங்கே குப்பை குவிந்துகிடப்பதால் சடலத்தை கொண்டு செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.

சமீபத்தில் பெய்த மழையால் சுடுகாட்டை சுற்றி செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் பிணத்தை எடுத்துச்செல்லும்போது பாம்பு, தேள் உள்ளிட்டவை வந்துவிடுகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுதவிர சுடுகாட்டில் அமர்ந்து மது அருந்துகின்றனர். எனவே, சுடுகாட்ைட சீரமைக்க திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆத்துப்பாக்கம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Shot ,Shoot , Gummidipoondi, Attukapakkam, Shoodakkad
× RELATED மூதாட்டியை பலாத்காரம் செய்த ‘பரோல்’...