×

சந்திரகாசி, கவுகாத்தி உள்பட பல நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: நாளை (27ம் தேதி) மதியம் 2.40 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 2.30 மணிக்கு பிளாஸ்பூர் சென்றடையும். ஜனவரி 5ம் தேதி திருநெல்வேலியில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம்வந்தடையும். ஜனவரி 3ம் தேதி சென்னை எக்மோரில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். ஜனவரி 4, 11, 18, 25; பிப்ரவரி 1, 8, 15, 22, 29; மார்ச் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படும் ரயில், மறுமார்க்கத்தில் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். வேளாங்கண்ணியிலிருந்து ஜனவரி 12, 19, 26; பிப்ரவரி 2, 9, 16, 23; மார்ச் 1,8,15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 2 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். சென்ட்ரலில் இருந்து ஜனவரி 1, 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 3.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 7 மணிக்கு சந்திரகாசி சென்றடையும்.
 
பாண்டிச்சேரியில் இருந்து ஜனவரி 4, 11, 18, 25; பிப்ரவரி 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 6, 13, 20, 27; பிப்ரவரி 3, 10, 17, 24, மார்ச்-2 ஆகிய தேதிகளில், சந்திரகாசியை காலை 4.30 மணிக்கு சென்றடையும். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜனவரி 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31; பிப்ரவரி 2, 7, 9, 14, 16, 21, 23, 28 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத்தை அடையும். விழுப்புரத்தில் ஜனவரி 1, 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். விழுப்புரத்திலிருந்து ஜனவரி 5ம் தேதி மதியம் 1.15 மணிக்கு புறப்படும் ரயில், எஸ்வந்த்பூருக்கு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சென்றடையும். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜனவரி 6, 13, 20, 27; பிப்ரவரி 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் காலை 6.5 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 11.25 மணிக்கு கவுகாத்தி சென்றடையும். கோவையில் ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு அசன்சல் சென்றடையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : cities ,Guwahati Chandrakasi ,Guwahati ,Chandrakasi , Chandrakasi, Guwahati, Special Trains, Southern Railway
× RELATED குத்துச்சண்டை போட்டியில் கிருஷ்ணகிரி மாணவர்கள் வெற்றி