×

பட்டாபிராம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி செய்யாவிடில் போராட்டம்: மக்கள் அறிவிப்பு

ஆவடி: பட்டாபிராம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி செய்துதராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பயணிகள் எச்சரித்துள்ளனர். சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில்  ஆவடி அருகே பட்டாபிராம் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கு 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள்  வேலை நிமிர்த்தமாக வந்து செல்கின்றனர். ஆனால் ரயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது; பட்டாபிராம் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் உள்ளன. 1வது, 2வது நடைமேடையில் பயணிகள் அமர்வதற்கு நிழற்குடை வசதிகள் இல்லை. குடிநீர் தொட்டிகளில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. மின் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து கிடக்கிறது. 2வது நடைமேடையில் இருந்து 3வது நடைமேடைக்கு செல்லும் பாதை வசதி இல்லை. 3வது நடைமேடையில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.

இங்கிருந்து தான் பட்டாபிராம், மிலிட்டரி சைடிங் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டும். 3வது நடைமேடையில் பெயரவிற்கு பயணிகள் அமர ஒரே ஒரு  நிழற்குடை மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது. இருட்டை பயன்படுத்தி பெண்களிடம் செயின்  பறிப்பு, வழிப்பறி, சில்மிஷம் நடைபெறுகிறது.ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடு‘படுவது கிடையாது. இதனால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 3வது நடைமேடை அருகில் உள்ள டிக்கெட் கவுண்டர் கட்டி முடிக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படவில்லை. பட்டாபிராம் ரயில் நிலைய பிரச்னை குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பட்டாபிராம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்காவிட்டால் பயணிகள் நல சங்கம் மூலம்ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினர்.

Tags : facilities ,Pattabram ,announcement ,railway station , Buttapram, infrastructure, struggle
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...