×

ஆசியாவிலேயே மிகப்பெரிய திருப்பதி வன உயிரியல் பூங்காவில் 5 வெள்ளை புலிக்குட்டிகள்: பார்வையாளர்கள் ஆர்வம்

திருமலை: திருப்பதி வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் 5 வெள்ளை புலிக்குட்டிகள் தங்களது தாயுடன் துள்ளி விளையாடும் குட்டிகளை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா திருப்பதி அலிபிரி சாலையில்  வெங்கடேஸ்வரா வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு மிகவும் அரிதாக காணக்கூடிய வெள்ளைப்புலிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சமீர்-ராணி என்ற இரண்டு ஜோடி வெள்ளை புலிகள் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 3 ஆண் குட்டிகளும், 2 பெண் குட்டிகளும் ஈன்றது. ஆனால் இவற்றை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. கூண்டில் வைத்து உயிரியல் பூங்கா அதிகாரிகள் பராமரித்து வந்தனர்.

8 மாதங்கள் நிறைவடைந்ததால் நேற்று இவற்றை பார்க்க வனத்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து இரண்டு பெரிய வெள்ளை புலிகளுடன் 5 குட்டி புலிகள் விளையாடுவதை பார்வையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். பார்வை நேரம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை பார்வையிட அனுமதி கொடுத்ததை அடுத்து அதிக அளவில் சுற்றுலா பயணிகளும், ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் வன உயிரியல் பூங்காவிற்கு வந்து பார்வையிட்டு வருகின்றனர்.

Tags : forest zoo ,Tirupati ,Asia ,Visitors , Asia, Tirupati, Wildlife Zoo, White Tigers
× RELATED பன்னர்கட்டா வன உயிரியல் பூங்காவிற்கு...