×

நாகையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் லாரி முழுவதும் பெட்டிபெட்டியாக மதுபானங்கள் பறிமுதல்


நாகை: முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் நாகப்பட்டினத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக லாரி நிறைய கடத்தி வரப்பட்ட மதுபானங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம்  ஈழங்குடி அருகே படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தபோது லாரி முழுவதும் 650 பெட்டிகளில் பல்வேறு வகையான மதுபானங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதிகாரியை கண்டதும் லாரியை நிறுத்தி ஓட்டுநர் மாயமாகிவிட்டார்.

 லாரி முழுவதும் 31,200 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். வந்தவாசி அருகே சீமாப்புத்தூரில் வாக்காளருக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் சோதனை நடத்தி சென்ற போது  ஒருவர் 1,35,000 ரூபாய் பணத்தை  சாலையில்  வீசி விட்டு தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். 


Tags : raid ,election ,city ,Naga , Naga, election flying force, raid, seizure of liquor
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...