சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எளிமை, வலிமையானது என்பதற்கான அடையாளம் அய்யா நல்லகண்ணு. கொண்ட கொள்கையில் உறுதியுடன், மக்கள் பிரச்சனைகளுக்காக இன்றும் வீதியில் நின்று குரல் கொடுக்கும் அய்யா அவர்களை, அவரின் 95-வது பிறந்தநாளில் வாழ்த்தி வணங்குகிறேன் என கூறியுள்ளார்.