×

கொண்டாட ஒரு தீவு!

நன்றி குங்குமம் முத்தாரம்

இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பதைக் கண்டுகொள்ள பலவன் தீவு போன்ற இடங்களே சாட்சி. இயற்கையின் பேரதிசியமான இந்தத் தீவு உலகின் தலைசிறந்த பத்து தீவுகளில் ஒன்று. பிலிப்பைன்ஸில் வீற்றிருக்கும் இத்தீவை அழகழகான மலைக்குன்றுகள் அலங்கரிக்கின்றன.
கடற்கரை, காடு, குகை என்று ஆரம்பம் முதல் இறுதி வரை சொர்க்கம் போலக் காட்சி தருகிறது பலவன்.

கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த தீவு பலவன் என்று அடித்துச் சொல்கிறது ‘நேஷனல் ஜியோகிராபிக்’ இதழ்.2016-ம் வருடம் ‘டிராவலர்’ பத்திரிகையின் வாசகர்கள் பலவனை ‘உலகின் மிக அழகான தீவாக’த் தேர்ந்தெடுத்தனர்.  இன்று வருடத்துக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் விசிட் அடிக்கும் இடமாக மிளிர்கிறது பலவன்.

Tags : island , An island to celebrate
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...