×

ஜனநாயக முறையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு மாணவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

கொல்கத்தா: ஜனநாயக முறையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு மாணவர்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மம்தா தலைமையில் மீண்டும் பேரணி நடைபெற்றது. தான் தலைமை ஏற்று நடத்திய பேரணியின் முடிவில் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடத்தினார். அப்போது பேசிய அவர், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து முரண்பாடான கருத்தை தெரிவிக்கும் பிரதமர் மோடி, அமித்ஷா இருவரில் யார் உண்மையை பேசுகிறார்கள் என கேள்வி எழுப்பி உள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன

மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. தற்போது வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ள போதிலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியே போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறார்.

Tags : Mamata Banerjee , Mamta Banerjee, Resident
× RELATED பாஜவை திருப்திபடுத்த 7 கட்ட தேர்தல் அட்டவணை: மம்தா விமர்சனம்