×

ஊட்டி குன்னூர் பகுதியில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு

ஊட்டி :  ஊட்டி அறையட்டி சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராம பகுதி வனத்தை ஓட்டியே அமைந்துள்ளதால் கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு மாடுகளின் எண்ணிக்ைக கணிசமாக உயர்ந்துள்ளது. இவை கூட்டம் கூட்டமாக தேயிலை தோட்டங்களில் மேய்ச்சலில் ஈடுபடுவது, சாலையை கடந்து செல்வது என நடமாடுவதை காண முடியும்.

இதனிடையே ஊட்டி கைகாட்டி அருகே அறையட்டி, ஆருகுச்சி, நெய்யட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமங்கள் வனத்தையொட்டி அமைந்துள்ளன. இக்கிராமங்களை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் சமீபகாலமாக காட்டு மாடுகள் கூட்டமாக உலா வருகின்றன. இதனால் கைகாட்டியில் இருந்து சாலை வழியாக நடந்து செல்பவர்கள் காட்டுமாடுகளை கண்டு அச்சமடைந்து வருகின்றனர்.

குன்னூர்: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுமாடுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை தேயிலை தோட்டம் மற்றும் விவசாய நிலங்களில் இரவு நேரத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி வருவதால் அவ்வப்போது பொது மக்களை தாக்குகிறது‌. இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. தற்போது சாரல் மழை பெய்து வருவதால், அனைத்து இடங்களிலும் புற்கள் பசுமையாக வளர்ந்து காணப்படுகிறது.  

இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள ஜிம்கானா பகுதியில் காட்டு மாடுகள் கூட்டமாக தேயிலை தோட்டங்களில் சுற்றி திரிகின்றன. இதனால் தேயிலை பறிக்க தொழிலாளர்கள் செல்ல கடும் பீதியடைந்து வருகின்றனர்.

Tags : area ,Ooty Coonoor ,roads ,Coonoor Wild , ooty ,Coonoor ,Wild cows , indian bulls
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...