×

நெருங்கும் பொங்கல் பண்டிகை: விழுப்புரத்தில் பாரம்பரிய முறைப்படி பானை தயாரிப்பு தீவிரம்

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த பாதிராப்புலியூர்  கிராமத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் பாரம்பரியமான முறையில் சட்டிகள், மண் பானைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீடூர் அணைகளிலிருந்தும் அருகில் உள்ள ஏரிகளிலிருந்தும் இரு வகை மண்ணை சேகரித்து காயவைத்து தூளாக்கி தண்ணீர் சேர்த்து கெட்டியாக்கி பானைகள் செய்யும் பதத்திற்கு தயாராக்குகின்றனர். தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கைகளால் சுற்றப்படும் சக்கரம் கொண்டு அழகாக நேர்த்தியாக பானைகளின் மேற்பாகம் உருவாக்கப்படுகிறது. தொடர்ந்து அடிப்பாகம் இணைக்கப்பட்டு ஈரமான பானைகளை காற்றில் உலரவைத்து பானைகளின் மீது செம்மண் கரைசல் பூசப்படுகிறது.

இறுதியாக இந்த பானைகள் சோலைகளில் இட்டு சுடப்பட்டு முழுமை பெறுகின்றனர். மண்பாண்ட தொழில் தவிர வேறு தொழில் தெரியாது என்று கூறும் இந்த கலைஞர்கள் மண் எடுப்பதில் உள்ள பிரச்சனைகளை களைய உதவ வேண்டும் என்கின்றனர். அதாவது டாமிலிருந்து மண்ணெடுத்தும், ஏரியிலிருந்து மண்ணெடுத்தும் இரண்டையும் இணைத்து தான் மண்பானைகள் செய்ய முடியும். அதற்கு மண்ணெடுக்க அரசு உதவ வேண்டும்.  நிலங்கள் எதுவும் இல்லாததால் இவர்கள் இந்த தொழிலை செய்கின்றனர்.  3 மாதங்கள் தொடர்ந்து செய்தால்தான் சட்டி பானைகளை பொங்கலுக்கு விற்பனை செய்ய முடியும்.


Tags : festival ,Villupuram , Pongal festival, Veedoor Dam, pots and mud pots
× RELATED மிஸ்கூவாகமாக சென்னை திருநங்கை தேர்வு