×

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அவசர கால அழைப்பு, கேமரா, சென்சார் கருவி ஒலிபெருக்கி வசதிகளுடன் ஸ்மார்ட் கம்பங்கள்

* சோதனை ஓட்டம் தொடக்கம்
* மாநகராட்சி அதிகாரி தகவல்

1. வைஃபை வசதி
2. ஸ்மார்ட் தெரு         விளக்கு
3. அவரச அறிவிப்பு         ஒலிபெருக்கி
4. கண்காணிப்பு         ேகமரா
5. 360 டிகிரி சுழல்         கேமரா
6. அவசர கால         அழைப்பு பட்டன்

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் அவசர கால அழைப்பு, கேமரா, சென்சார் கருவி ஒலிபெருக்கி வசதிகளுடன் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 1000 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பல்வேறு திட்ட பணிகள் மற்றும் வசதிகளை கண்காணிக்க ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 150 கோடி செலவில் ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டு வருகிறது. கேரள அரசு நிறுவனமான கேரளா ஸ்டேட் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், அவரச கால பட்டன், பேரிடர் கண்காணிப்பு, சுழல் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கம்பத்தின் கீழ் பகுதியில் அவசரகால பட்டன் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பேரிடர் உள்ளிட்ட பல்வேறு அவசர காலங்களில் இந்த பட்டனை அழுத்தலாம். இந்த தகவல் உடனடியாக கட்டுப்பாட்டு மையத்தை சென்றடையும். அங்கிருந்து சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து, அந்த இடத்திற்கு உடனடியாக உதவி குழு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கு மேலே வாகன நிறுத்த கண்காணிப்பு கேமரா மற்றும் 360 டிகிரி சுழலும் கண்காணிப்பு கேமரா, பொது அறிவிப்பு ஒலி பெருக்கி ஆகியவை இடம்பெற்றுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டிய அறிவிப்புகள் இந்த ஒலி பெருக்கு மூலம் தெரிவிக்கப்படும். மேலும், வை-பை வசதி மற்றும் ஸ்மார்ட் எல்இடி ெதரு விளக்கு வசதியும் இந்த கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மழையின் அளவை கண்காணிப்பதற்கான சென்சார் மற்றும் இயற்கை நிகழ்வுகளை கண்காணிப்பதற்கான சென்சார்களும் இந்த கம்பத்தில் அமைக்கப்பட உள்ளன. மழையின் அளவை கண்காணிக்கும் சென்சார் மற்றும் இயற்கை நிகழ்வுகளை கண்காணிக்கும் சென்சார்களும் இந்த கம்பங்களில் அமைக்கப்படவுள்ளன. எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதை அறிந்து,  மழை பாதிப்பு குறித்த அறிவிப்பு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இயற்கை நிகழ்வுகளை கண்காணிக்கும் சென்சார்கள் மூலம் காற்றின் தரத்தை காண்காணிக்க முடியும். இதன்மூலம் காற்று மாசு அதிகமாக இருந்தால், இது தொடர்பான தகவலை பொதுமக்களுக்கு தெரிவிக்க முடியும். ஜீவா பூங்கா, சிவன் பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரை, உஸ்மான் சாலை, நியூ ஆவடி சாலை, வாலாஜா சாலை, கொங்கு ரெட்டி சுரங்கபாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் இது கம்பங்கள் அமைக்கப்பட உள்ளன.  இது தொடர்பாக சிறப்பு திட்டங்கள் துறையின் தலைமை பொறியாளர் நந்தக்குமார் கூறியதாவது:  சென்னை மாநகராட்சியில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கண்காணிக்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது. காவல், தீயணைப்பு, போக்குவரத்து, வானிலை, ேபரிடர் மேலாண்மை, பொதுப் பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து தகவல் பெறப்படும். இதைக் கொண்டு அனைத்து துறைகளுடன் இணைந்து பல்வேறு கண்காணிப்பு பணிகளை செய்ய முடியும். இதற்கான சோதனை ஒட்டம் விரைவில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

செயலிகள்
இந்த திட்டத்தின்கீழ், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பயன்பாட்டுக்காக 2 செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. வெர்க் ஸ்பேஸ் எனப்படும் அதிகாரிகளுக்கான செயலியில் அனைத்து அதிகாரிகளின் தொடர்பு எண்ணிகள் இருக்கும். இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதியின் குறைகளை அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம்.

குப்பை அகற்ற  சென்சார் கருவி
இந்த திட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை கம்பங்களும்  அமைக்கப்படவுள்ளது. இந்த கம்பங்களில் கேமராக்களும், குப்பை ெதாட்டிகள்  சென்சார்களும் இடம் பெற்றிருக்கும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல், தொட்டிகளில் குப்பை சேர்ந்து விட்டால் சென்சார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்  தெரிவித்துவிடும். இதனைத் தொடர்ந்து தொழிலாளர் அந்த குப்பையை தொட்டியை  சுத்தம் செய்வார்கள். மேலும் தொட்டியை சுற்றி உள்ள பகுதிகளை கேமரா மூலம்  கண்காணிக்க முடியும்.



Tags : Chennai ,accommodations ,sensor instrument speakers , Chennai, Camera, Sensor Tool, Smart Poles
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!