×

ஓசூர் பகுதியில் சொட்டு நீர் பாசனத்தில் பீன்ஸ் சாகுபடி

ஒசூர்: ஓசூரில் சொட்டு நீர் பாசனத்தில் விவசாயிகள் பீன்ஸ் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, சின்னபேளகொண்டப்பள்ளி, சூளகிரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பசுமைக்குடில்கள் அமைத்து பூக்கள் சாகுபடி செய்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கும்,  வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதமாக விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்திற்கு மாறி வருகின்றனர். இதில் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளுக்கு அடுத்த படியாக பீன்ஸ் சாகுபடியில்  தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஓசூர் பகுதியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலையால் பீன்ஸ்  சாகுபடி செய்யப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்தில் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ₹1 லட்சம் வரை  செலவாகிறது. மேலும் 3 மாதத்தில் அறுவடைக்கு வந்து நல்ல லாபம் கிடைப்பதால் சொட்டு நீர் பாசனத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். பீன்ஸ் அறுவடை செய்து சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும்  விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த வாரங்களில் ஒரு  கிலோ பீன்ஸ் ₹15 முதல் 20 வரை விற்பனையானது. தற்போது ஒரு கிலோ ₹40 வரை விலை போகிறது, என்றனர்.

Tags : Hosur , Cultivation of beans in drip irrigation in Hosur
× RELATED ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ