×

வெற்றிதான்; ஆனால் ஜேஎம்எம் வாக்கு சதவீதம் சரிவு

ராஞ்சி:  ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) ஆட்சியை பிடித்தாலும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது அதன் வாக்கு வங்கியானது 2 சதவீதம் குறைந்துள்ளது.  ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகள் கூட்டணி அமைத்து பாஜவிடம் இருந்து ஆட்சியை பிடித்துள்ளன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றபோதிலும் கடந்த 2014ம் ஆண்டு பெற்ற வாக்குவங்கியை விட இந்த முறை 2 சதவீதம் குறைவாக பெற்றுள்ளது. ஆனால் இந்த தேர்தலில் கூடுதலாக 11 இடங்களை கைப்பற்றியுள்ளது.  அதேநேரத்தில் பாஜவின் வாக்கு வங்கியானது 2014ம் ஆண்டை காட்டிலும் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டு பாஜ 31.26 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. இந்த தேர்தலில் இது 33.37 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் பாஜ வெற்றி பெற்ற தொகுதிகளில் எண்ணிக்கையானது 37ல் இருந்து 25 தொகுதிகளாக குறைந்துள்ளது.

2014ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 30 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கியும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டு தேர்தலில் 10.46 சதவீத வாக்குகளுடன் 9 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியானது இந்த முறை 13.88 சதவீதம் வாக்கு வங்கியை பெற்றுள்ளதோடு, 16 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.  கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்ததால் 74 தொகுதிகளில் பாஜபோட்டியிட்டது. ஆனால் இந்த முறை 79 இடங்களில் தனித்து போட்டியிட்டதே வாக்கு வங்கி அதிகரிப்பதற்காக காரணம் என கூறப்படுகினற்து. ஜார்கண்ட் முக்திமோர்ச்சாவானது 2014ம் ஆண்டு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. இந்த தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டதால் 43 ெதாகுதிகளில் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்தியது.

2005ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜ 23.57 சதவீத வாக்குவங்கியுடன் 30 தொகுதிகளிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 14.29 சதவீத வாக்குகளுடன் 17 ெதாகுதிகளிலும், காங்கிரஸ் 12.05 சதவீத வாக்கு வங்கியுடன் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. 2009ம் ஆண்டு தேர்தலில் பாஜ, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலா 18 தொகுதிகளை முறையே 20.18 மற்றும் 15.2 சதவீத வாக்கு வங்கியைபெற்றிருந்தன.  காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளில்  வெற்றி பெற்றது. இதன் வாக்கு சதவீதம் 16.16 சதவீதமாகும்.

கட்சி மாறியவர்களுக்கு அல்வா
தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படாதது, விருப்பப்பட்ட தொகுதி ஒதுக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களினால் கட்சி மாறிய 10 விஐபிக்களை ஜார்க்கண்ட் மக்கள் வாக்களிக்காமல் நிராகரித்துள்ளனர். தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக முன்னாள் பாஜ செய்தி தொடர்பாளர் பிரவீன் பிரபாகர் தேசிய மக்கள் கட்சியில் இணைந்தார். நாளா தொகுதியில் போட்டியிட்ட இவர் வெறும் 987 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.  முன்னாள் பாஜ மாநில தலைவர் ராதாகிருஷ்ண கிஷோர், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் ஏஜேஎஸ்யூவில் இணைந்தார். பாஜ வேட்பாளர் புஷ்பா தேவியால் சத்தர்பூர் ெதாகுதியில் இவர் ேதாற்கடிக்கப்பட்டார். ஜார்க்கண்ட் பிரதேச காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் பிரதீப் குமார் பால்மாச்சு கட்சி மாறி ஏஜேஎஸ்யூ சார்பாக காட்சிலா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மற்றொரு முன்னாள் தலைவர் சுக்தே பாகத் லோஹர்தாகா தொகுதியில் பாஜ வேட்பாளராக களம் இறங்கியும் தோல்வி அடைந்தார்.

இதேபோல் ஏஜேஎஸ்யூ சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜார்கண்ட் பாஜ தலைவர் தாலா மராண்டி, பாஜவில் இருந்து ஜேஎம்எம்மில் இணைந்த பூல்சந்த் மண்டல், அதேபோல் ஜேஎம்எம்மில் இருந்து விலகி பாஜ வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏ குணால் சாரங்கி, காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்த மனோஜ் யாதவ், ஜேம்எம்எம்மில் இருந்து விலகி ஏஜேஎஸ்யூ வேட்பாளராக போட்டியிட்ட அகீல்அன்சாரி ஆகியோரையும் மக்கள் புறக்கணித்துள்ளனர்.  அதே நேரத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சர்பாராஸ் அகமத் ஜேஎம்எம் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஜேஎம்எம்ைம  சேர்ந்த  முன்னாள் அமைச்சர் பானு பிரதாப் சாய் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பாஜவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் பைத்யநாத் ராம் ஜேஎம்எம் கட்சி சார்பில்போட்டியிட்டு வென்றார்.

Tags : JMM , JMM, the vote percentage decline
× RELATED ஜார்க்கண்ட் அரசுக்கு எந்த சிக்கலும்...