×

மத்தியப் பிரதேசத்துடன் மோதல் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா தமிழகம்? ரஞ்சியில் நெருக்கடி

இந்தூர்: ரஞ்சி கோப்பை தொடரில் தமிழக அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டிய நெருக்கடியுடன் மத்தியப் பிரதேசத்தின் சவாலை எதிர்கொள்கிறது. நடப்பு ரஞ்சி சீசனில் எலைட் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் கர்நாடகா அணியிடம் 26 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது. அடுத்து 2வது லீக் ஆட்டத்தில் இமாச்சலப் பிரதேசத்துடன் மோதிய தமிழகம் 71 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

முன்னணி வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர், முரளி விஜய், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாததும் பின்னடைவை ஏற்படுத்தியது. இமாச்சலுக்கு எதிராக முதல் இன்னிங்சில் 96 ரன்னில் ஆல் அவுட்டானதும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ள தமிழக அணி, அடுத்து 3வது லீக் ஆட்டத்தில் மத்தியப் பிரதேசத்துடன் மோதுகிறது.

இந்தூரில் இன்று காலை 9.30க்கு தொடங்கும் இப்போட்டியில், ஹாட்ரிக் தோல்வியை தவிர்ப்பதுடன் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில்  தமிழக அணி உள்ளது. சுழற்பந்துவீச்சில் ஆர்.அஷ்வின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நடராஜன், விக்னேஷ், சாய் கிஷோர் ஆகியோரும் பந்துவீச்சில் கை கொடுத்தாலும், பேட்ஸ்மேன்கள் கணிசமாக ரன் குவித்தால் மட்டுமே மத்தியப் பிரதேச அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

Tags : Crisis ,Madhya Pradesh ,Ranchi , Madhya Pradesh, clash, hat-trick failure Ranji, Crisis
× RELATED வந்தே பாரத் லாபம் எவ்வளவு தெரியுமா?.. ஆர்டிஐ மனுதாரர் அதிருப்தி