×

உதான் திட்டத்தின் கீழ் எளிதான ஒன்றான மாறிவரும் விமான பயணம்: இதுவரை 35 லட்சம் பேர் பயணித்திருப்பதாக தகவல்

புது டெல்லி: உதான்  திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள சாமானிய மக்களும் விமானத்தில் செல்லும் நோக்கத்தில் குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்துச் சேவை வழங்கும் உதான் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. உதான் திட்டத்தின் கீழ் இயங்கும் விமான நிலையங்கள் வாயிலாக சுமார் 35 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணித்திருப்பதாக மத்திய அரசு தகவல் வெளிட்டிருக்கிறது. நாட்டில் உள்ள சிறிய நகரங்களில் விமான நிலையங்களை ஏற்படுத்தியும்  அதனை மேன்படுத்தியும் பெருநகர விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றோடு இணைக்கும் திட்டம் ஆர்சிஎஸ்-உதான் திட்டம் ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட உதான்  திட்டத்தின் கீழ் இதுவரையில் 35 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணித்திருப்பதாக சிவில் விமான போக்குவரத்துத்  துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. உதான்  திட்டம் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டிருப்பதால் பயண நேரம் குறைந்திருப்பதாகவும் சுற்றுலா ஆன்மீகப் பயணங்கள் எளிதாக இருப்பதாகவும் சிவில் விமான போக்குவரத்து துறைத் தெரிவித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டில் உதான் திட்டத்தின் செயல்பாடுகள் மேலும் சிறப்பாக இருக்கும் எனவும், அதிகப் பேர் விமானப் பயணம் மேற்கொள்வார்கள் எனவும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Tags : Udon Project, Federal Government, Civil Aviation, Aviation
× RELATED பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட...