×

மலேசிய விமானத்தில் இயந்திர கோளாறு

சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 219 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானம் காலை 10.45 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டும். ஆனால், நடுவானில் வந்தபோது, திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே, விமானம் மீண்டும் அவசரமாக மலேசியாவுக்கே திரும்பிச்சென்று கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.  அதே சமயம் இந்த விமானத்தில் பயணம் செய்ய 186 பயணிகள் காத்திருந்தனர். ஆனால், விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக பாதியிலேயே மீண்டும் மலேசியாவுக்கு திரும்பியது. எனவே, இந்த விமானத்தில் பயணம் செய்ய சென்னையில் தயாராக இருந்த 186 பயணிகள் விமான நிலையத்திலேயே தவித்தனர்.

Tags : Malaysian , Malaysian flight, mechanical disorder
× RELATED மலேசியாவில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி 10 பேர் பலி