×

ஜெய்சங்கருடனான சந்திப்பு ரத்து விவகாரம் பிரமிளா இடம் பெற்றது எங்களுக்கு தெரியாது : அமெரிக்க வெளியுறவு விவகார குழு தலைவர் தகவல்

வாஷிங்டன்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க இருந்த அமெரிக்க எம்பிக்கள் பட்டியலில் பிரமிளா பெயர் இடம் பெற்றிருந்தது தெரியாது என அமெரிக்க வெளியுறவு விவகாரக் குழு தலைவர் தெரிவித்துள்ளார். சென்னையில் பிறந்த அமெரிக்க வாழ் எம்பி பிரமிளா ஜெயபால். அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் எம்பியான இவர், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மோடி அரசு மேற்கொண்ட காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தையும் கொண்டு வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு நடந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.

பின்னர் அங்குள்ள வெளியுறவுத்துறை விவகார குழு, வெளியுறவு செனட் குழு ஆகியவற்றை சந்திக்க திட்டமிட்டிருந்தார். வெளியுறவுத்துறை செனட் குழுவுடனான சந்திப்பு நடைபெற்ற நிலையில், ஜனநாயக கட்சி எம்பி எலியட் ஏஞ்சல் தலைமையிலான வெளியுறவுத்துறை விவகார குழுவுடனான சந்திப்பை கடந்த 18ம் தேதி ஜெய்சங்கர் திடீரென ரத்து செய்தார். ஜெய்சங்கருடனான சந்திப்பு பட்டியலில் இந்திய வம்சாவளி எம்பி பிரமிளா மற்றும் 2 எம்பிகள் இடம்பெற்றிருந்தனர். சந்திப்பு ரத்து தொடர்பாக அமெரிக்க வெளியுறவு குழு வட்டாரங்கள் கூறியதாவது: வெளியுறவுத்துறை விவகார குழுவில் உறுப்பினராக இல்லாத பிரமிளாவும் இந்திய அமைச்சர் ெஜய்சங்கரை சந்திக்க இருந்தது, சந்திப்பு ரத்து செய்யப்பட்ட 18ம் தேதி காலையில்தான் தலைவர் எலியட் ஏஞ்சலுக்கு தெரியவந்தது. அவரது ஒப்புதல் பெறாமலே பிரமிளா பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Jaishankar ,meeting ,Pramila ,US Foreign Affairs Committee , We do not know , Pramila's meeting,Jaishankar was canceled:
× RELATED இலங்கை சிறையில் உள்ள மீனவர்களுக்கு...