×

ஹோண்டுராஸ் நாட்டு சிறையில் கைதிகள் மோதலில் 36 பேர் பரிதாப பலி

டெகுசிகால்பா: ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 36 பேர் பலியாகினர். மத்திய அமெரிக்காவை சேர்ந்த நாடு ஹோண்டுராஸ். போதை மருந்து கடத்தல், வறுமை, ஊழல் போன்றவற்றில் இந்த நாடு சிக்கி தவிக்கிறது. இங்குள்ள பெரிய சிறைகளில் தலா 8 ஆயிரம் கைதிகளை அடைக்க இடவசதி உள்ள நிலையில் அளவுக்கு அதிகமாக 21,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் அடிக்கடி இங்கு கலவரங்கள் ஏற்படுவது உண்டு.

இந்நிலையில், தலைநகர் டெகுசிகால்பாவுக்கு அருகேயுள்ள டெலா என்ற துறைமுக நகரில் உள்ள சிறையில் கைதிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது கைதிகள் துப்பாக்கியால் சுட்டதில், அவர்களில் 18 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, டெகுசிகால்பாவிக்கு வடக்கே உள்ள எல்போர்வேனியர் சிறையில் நேற்று முன்தினம் பிற்பகலில் கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது அவர்கள் துப்பாக்கிகள், கத்திகள், அரிவாளால் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் 18 கைதிகள் கொல்லப்பட்டனர். 10 கைதிகள் காயம் அடைந்தனர். 2 நாட்களில் மட்டும் 36 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Honduras ,prisoners ,deaths , Honduras, Prisoners clashed, 36 prisoners
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ