×

பள்ளி, கல்லூரிகள் 3ம் தேதி திறப்பு

சென்னை: பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறைக்கு பிறகு ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. தற்போது ஜனவரி 3ம் தேதி திறக்க மறு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த போராட்டம் தீவிரம் அடையாமல் இருப்பதை தடுக்க, கடந்த 21ம் தேதி முதல் பல்கலைக் கழகம், கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை விடுமுறை அறிவித்தது.  மேலும், உள்ளாட்சித் தேர்தல் 27, 29ம் தேதிகளில் இரண்டுகட்டமாக வாக்குப்பதிவு நடகிறது. அதற்காகவும் சேர்த்து விடுமுறை என்றனர்.  இதன்படி 2020 ஜனவரி 2ம் தேதி மீண்டும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடக்கிறது. அதனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்து ஜனவரி 3ம் தேதி கல்லூரிகள் திறக்க வேண்டும் என்றும் தற்போது உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையே, பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புத் தேர்வுகள் கடந்த 11ம் தேதி தொடங்கின. நேற்றுடன் இந்த தேர்வுகள் முடிந்தன. முன்னதாக தேர்வுகள் முடிந்த பிறகு டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதை அடிப்படையாக கொண்டு, அனைத்து பள்ளிகளிலும் நேற்று தேர்வுகள் முடிந்ததும், ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று தலைமை ஆசிரியர்கள் மாணவர்களிடம் தெரிவித்தனர்.  இதற்கிடையே, ேநற்று மதியம் பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய உத்தரவில்,‘நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 23ம் தேதி முடிவு பெறுகிறது. இந்த தேர்வு விடுமுறைக்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 3ம் தேதி திறக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஜனவரி 3ம் தேதி திறக்கப்பட உள்ளன. 


Tags : School ,Colleges Opening School ,Colleges Opening , School,Colleges
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி