×

அதிவிரைவு வான் தாக்குதல் ஏவுகணை சோதனை வெற்றி

பாலசூர்: தரையிலிருந்து வான் இலக்குகளை அதிவிரைவாக தாக்கும் ஏவுகணை (கியூஆர்எஸ்ஏஎம்) நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. தரையிலிருந்து வான் இலக்குகளை தாக்கும் அதிவிரைவு ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்தது. இது ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள சோதனை மையத்தில் நேற்று காலை 11.45 மணியளவில் சோதித்து பார்க்கப்பட்டது.

இந்த கியூஆர்எஸ்ஏஎம் ஏவுகணை, விண்ணில் ஏவப்பட்ட மற்றொரு ஏவுகணையை, துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது. இந்த சோதனை ரேடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிக்கல் டிராக்கிங் கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டன. இது வெற்றிகரமாக முடிந்ததாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர். 2021ம் ஆண்டில் இந்த ரக ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : High speed, air strike, missile test, success
× RELATED நாட்டில் 25 கோடி மக்களை வறுமையில்...