×

ஆற்றில் பாலம் இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை மக்கள் சுமந்து செல்லும் அவலம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவில்பத்து கிராமத்தில் மாதாகோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் மொத்தம் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தை சேர்ந்தவர்களில் யாரேனும் உறவினர்கள் இறக்கும்போது அவர்களை அடக்கம் செய்வதற்குரிய சுடுகாடு அங்குள்ள புத்தாற்றின் எதிர்க்கரையில் உள்ளது. இதன் காரணமாக கோடைகாலங்களில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதில் எவ்வித சிரமமும் இல்லாத நிலையில் மழை காலங்களில் இறந்தவர்களின் உடல்களை இடுப்பளவு நீரில் சுமந்து செல்லும் அவல நிலை இருந்து வருகிறது.

நேற்றுமுன்தினம் மாதா கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன் (55) என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்த நிலையில் அவரை இதேபோன்று இடுப்பளவு நீரில் தூக்கி சென்றனர். அரை கிலோ மீட்டர் தூரத்தில் திருவிடைச்சேரி அருகே மூங்கிலால் ஆன நடைபாலம் ஒன்று இருந்து வந்தாலும், அதில் இறந்தவர் உடலை தூக்கிக்கொண்டு செல்வது, அல்லது சாகுபடி செய்த நெல் மூட்டைகளை அந்த கரையில் இருந்து இந்த கரைக்கு கொண்டு வருவது என்பது இயலாத காரியமாக இருந்து வருகிறது. எனவே இந்த அவல நிலையை போக்குவதற்கு அந்த பகுதியில் கான்கிரீட் நடை பாலம் ஒன்று கட்டி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,river ,bridges , The river, the corpse, the plow
× RELATED பசுபதிபாளையம் பாலம் அருகே அமராவதி...