கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு டைசனிடம் செரினா பயிற்சி: ரசிகர்கள் உற்சாகம்

வாஷிங்டன்: பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், அடுத்த வருடம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு  தீவிரமாக தயாராகி வருகிறார். இந்நிலையில் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன், செரினாவிற்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.  குத்துச்சண்டையில் உள்ள நுட்பங்களை செரினாவிற்கு அவர் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். இந்த வீடியோவை மைக் டைசன் தனது ட்விட்டர்  பக்ககத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘இவருடன் நான் ரிங்கில் களமிறங்க விரும்பவில்லை. மிகவும் அன்பான, மரியாதை உள்ளவர்’ என்று  பதிவிட்டுள்ளார். வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் என்பதால் அதில் வெற்றி பெறும் முனைப்பில் செரினா  உள்ளார். குத்துச்சண்டை ஜாம்பவானும், டென்னிஸ் ஜாம்பானும் இணைந்து பயிற்சி பெற்ற வீடியே இணையத்தில் ரசிகர்களிடையே பெரும்  வரவேற்பை பெற்றுள்ளது. மைக் டைசனிடம் பயிற்சி பெறும் வீடியோவை செரினா வில்லியம்ஸ் மற்றும்  அவரது பயிற்சியாளரும் தங்களது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>