×

மங்களூரு துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்த விவகாரம்: சி.ஐ.டி விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவு

பெங்களூரு: மங்களூரு துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கர்நாடக மாநிலம் மங்களூரில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மங்களூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போலீசாரை தாக்க முற்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த மங்களூருவை சேர்ந்த ஜலீல்(49), நவ்ஷின்(23) ஆகியோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடியூரப்பா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததோடு, தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையும் அறிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மங்களூரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போ் உயிரிழந்துது என்னை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, மங்களுருக்கு சென்று உயிழந்தவா்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன். சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொண்டு, துப்பாக்கிச்சூட்டில் பலியானவா்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். துப்பாக்கிச்சூடு தொடா்பாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அது எந்தமாதிரியான விசாரணை என்பதனை காவல்துறை அமைச்சருடன் ஆலோசனை செய்து, பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா மங்களூரு துப்பாக்கிச்சூடு குறித்த சி.ஐ.டி விசாரணை அறிவிப்பை வெளியிட்டார்.


Tags : Yeddyurappa ,Karnataka ,CID ,shootout ,Mangalore , Mangaluru, gunfire, CID investigation, CM Yeddyurappa
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...