×

நெல்லை – சென்னை: அதிகாலை 4.30 மணி முதல் காலை 9 மணி வரை பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு

நெல்லை: நெல்லை – சென்னைக்கு அதிகாலை 4.30 மணி முதல் காலை 9 மணி வரை அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரவு 9 மணிக்குள் சென்னைக்கு வருவதற்கான நேரத்தை கணக்கிட்டு பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. நாள்தோறும் நெல்லையில் இருந்து 60 தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். இங்கிருந்து சென்னைக்கு செல்லும் தொலைவு சுமார் 650 கி.மீ. கொரோனா விதிமுறைகளால் இரவு நேர பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசால் அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிடப்படும் வரை மாலை, இரவு நேர பேருந்துகள் இன்றே கடைசி. நாளை முதல் காலை 4.30 மணி முதல் 9 வரை மட்டுமே நெல்லையிலிருந்து சென்னைக்கு இயக்க திட்டமிட்டுள்ளனர். சென்னை செல்வதற்கான கடைசி பேருந்து என்பது காலை 9 மணி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல பெங்களூரு, ஆந்திரா, திருப்பதி செல்வதற்கான பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டிய பயணிகள் ஓசூரிலும், திருப்பதி செல்ல வேண்டும் என்றால் அவர்கள் வேலூரிலும் இறக்கிவிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தனியார் பேருந்துகளை பொறுத்தவரை காலை 8 மணி முதல் 10 மணி வரை நெல்லையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் சென்னை சென்று சேர்ந்துவிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தனியார் பேருந்துகள் நிர்வாகம் செய்து வருகின்றனர். தற்போது வரை ரயில் பயணங்களுக்கு தடை இல்லை. நெல்லையில் இருந்து 4 ரயில்கள் சென்னைக்கு செல்கின்றன. நெல்லை வழியாக திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் என மூன்று ரயில்கள், நெல்லையிலிருந்து சென்னைக்கு ஒரு ரயில் என மொத்தம் 4 ரயில்களும் பேருந்து சேவைக்கு பக்கபலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக காலை முதல் 40 பேருந்துகள் வரை இயக்கப்பட உள்ளதாக கூறியுள்ளனர். தேவையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்….

The post நெல்லை – சென்னை: அதிகாலை 4.30 மணி முதல் காலை 9 மணி வரை பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Nella ,Chennai ,Government Quick Transport Corporation ,Nedal ,Nellam ,Paddy ,Government Fast Transport Corporation ,
× RELATED நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு...