×

நைஜீரிய கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் விடுதலை: இந்திய தூதரகம் தகவல்

டெல்லி: நைஜீரிய கடல் பகுதியில் ஹாங்காங் கொடியுடன் விஎல்சிசி, நேவ் கான்ஸ்டிலேஷன் என்ற  கப்பல் நைஜீரிய கடற்பகுதியை கடக்கும்போது கடந்த 3 ஆம் தேதி  கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்தக் கப்பலில் 18 இந்தியர்கள் உள்பட 19 பேர் பணியாற்றி வந்தனர். இந்த கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்தை சர்வதேச கடல் பாதுகாப்பு நிறுவனமான ஏ.ஆர்.எக்ஸ். வெளியிட்டுள்ளது. இதுபற்றிய தகவல், நைஜீரிய நாட்டில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு கிடைத்தது. இதனை அடுத்து நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்நாட்டு அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர்.

இந்தியர்கள் 18 பேருடன் சென்ற கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் நைஜீரியா கடற்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில், கடத்தப்பட்ட கப்பல், நைஜீரிய கடற்படை கண்காணிப்பில், பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நைஜீரிய கடல் பகுதியில் கடத்தப்பட்ட இந்திய மாலுமிகள் 18 பேரை மீட்கும் நடவடிக்கையில் நைஜீரிய அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள், அந்த நாட்டு அரசை தொடர்பு கொண்டு கப்பலில் இருந்த இந்தியர்களை மீட்க உதவுமாறு வேண்டுகோள் விருத்தது. நைஜீரியாவில் உள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளை தொடா்பு கொண்டு கடத்தப்பட்ட இந்தியா்களை  மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், கடத்தப்பட்ட 18 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில்; நைஜீரியாவின் கடற்படை மற்றும் கப்பல் நிறுவனம், பணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்த  18 இந்தியர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.

இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்க உதவிகரமாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Indians ,Indian Embassy ,pirates ,Nigerian , Nigerian Sea Area, 18 Indians, Liberation, Indian Embassy
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...